கரூர் : கரூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் வருகையையொட்டி, சாலைகள் பட்டி டிங்கரிங் பார்க்கப்படுவதும், அப்போது, திமுக எம்.எல்.ஏ சிவகாம சுந்தரி போஸ் கொடுப்பதையும் எதிர்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை கரூர் மாநகருக்கு முதல்வரான பின்னர் முதன் முதலாக வருகிறார். திருச்சியிலிருந்து சாலை மார்க்கமாக வரும் அவருக்கு கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் கிருஷ்ணராயபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் மற்றும் பல பகுதியில், பல இடங்களில் மழை நீர் வடிகால் மூடி பழுதடைந்து உடைந்து உள்ளது.
இதை பலமுறை மாற்றச் சொல்லி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த பலனும் இல்லை. தமிழக முதலமைச்சர் இன்று வரும் நிலையில் இதே நிலை நீடிக்கிறது. அது யார் நடவடிக்கை எடுப்பது என்று அந்த ஊர் மக்கள் சமூக வலைதளங்களில் செய்தியாக பரவியது.
இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் பேருந்து நிறுத்த பகுதியில் உள்ள கழிவுநீர் சாக்கடை மற்றும் குட்டைகள் மூடப்பட்டது. கடந்த 1 வருடத்திற்கு மேலாக திமுகவில் வெற்றி பெற்ற பெண் எம்.எல்.ஏ. சிவகாம சுந்தரி, முதலமைச்சரின் வருகையையொட்டி மேற்கொள்ளப்படும் பணிகளை அருகில் இருந்து பார்வையிட்டார்.
கழிவுநீர் சாக்கடைகளை மூடுமாறு பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தியும் அதனை மேற்கொள்ள முன்வராத நிலையில், முதலமைச்சரரின் வருகைக்காக அந்த இடங்கள் சரி செய்யப்பட்டதோடு, போட்டோவிற்கு போஸ் கொடுத்ததை எதிர்கட்சியினரும், பொதுமக்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அதேவேளையில், கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி, ஜல்லிவாட நாயக்கனூரில் உள்ள தொட்டிய நாயக்கர் சமூக மக்களின் வழிபாடு கோயிலான வீரசக்கதேவி ஆலயம் அமைந்துள்ள, மந்தை நிலங்களில் இலங்கை மக்களின் முகாம் அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழக அரசும், கரூர் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் இந்தப் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணிகளை கைவிட வலியுறுத்தி பல்வேறு மனுக்கள் அளித்த பிறகும் எந்த வித நடவடிக்கையும் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், பேனர் அடித்து இன்று ஒரு நாள் மட்டும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் வருகை ஒரு புறம் இருக்க, மற்றொரு புறம் கருப்பு கொடி போராட்டம் நடந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.