ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த வழக்கு : திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!!

23 May 2020, 4:00 pm
KArur Senthil Balaji - updatenews360
Quick Share

கரூர் : கரூர் ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த கரூர் மாவட்ட ஆட்சியரிடம், ‘வெளியே நடமாட முடியாது’ என பகிரங்கமாக திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் தாந்தோன்றிய மலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் எம்எல்ஏ செந்தில்பாலாஜி மீதான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி கைதாகி ஜாமீனில் வந்த நிலையில், அக்கட்சியின் எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பது அக்கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply