கடன் பிரச்சனையால் சின்னாபின்னமான குடும்பம்… தந்தை, மகள் தற்கொலை… மனைவி உயிருக்கு போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 11:37 am
Quick Share

கரூரில் கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தை சார்ந்த தந்தை, மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தயுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் கிழக்கு, அமராவதி நகரில் வசிப்பவர் முகமது பரீத் (46 வயது ). அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு நஸ்ரின் பானு என்ற மனைவியும், ஜூஹினாச் என்ற ( 16 வயது ) மகளும் உள்ளனர். இவர் தான் குடியிருக்கும் வீட்டை அரசு வங்கியிலும், கூட்டுறவு வங்கியிலும் கடன் வாங்கி வீடு கட்டியதாக கூறப்படுகிறது.

இதனால், குடும்பத்திற்குள் பிரச்சினை காரணமாக முகமது பரீத் அவரது மனைவி, மகளுக்கு தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் சல்பர் மாத்திரையை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தகவலறிந்த உறவினர்கள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூஹினாச் உயிரிழந்தார்.

அங்கு மருத்துவர்கள் நிலைமை மோசமாக இருப்பதால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, முகமது பரீத்தையும், அவரது மனைவியையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் முகமது பரீத் உயிரிழந்தார். அவரது மனைவி நஸ்ரின் பானு (வயது 39) கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உயிரிழந்த முகமது பரீத் மற்றும் அவரது மகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாந்தோன்றிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 687

0

0