பஞ்சாயத்து அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றிய திமுக பிரமுகர் : கரூரில் கிளம்பிய சர்ச்சை…!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 3:46 pm
Quick Share

கரூரில் காதப்பாறை ஊராட்சிமன்ற அலுவலகத்தில் குடியரசு தினத்தையொட்டி திமுக பிரமுகர் தேசியகொடியேற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, காதப்பாறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தின விழா இன்று நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவரின் அதிகாரம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதால் பஞ்சாயத்து தலைவர் கலந்து கொள்ளவில்லை, பஞ்சாயத்து செயலாளர் இருந்த போதும், குடியரசு தினமான இன்று தேசியக் கொடியை ஏற்றிவைத்த திமுக பிரமுகரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் திமுக பிரமுகர் அருகம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிபி கந்தசாமி என்பவர் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். தேசியக்கொடியை சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய நாட்களில், கட்சிப் பிரமுகர்களும் கட்சி அலுவலகத்தில் ஏற்றலாம்.

இந்நிலையில், பஞ்சாயத்து அலுவலகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டுப்பாட்டிலும் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலும், திமுக தலைமையிலான தமிழக அரசின் கட்டுப்பாட்டிலும் உள்ள நிலையில், திமுகவினரின் அத்துமீறல் என்று கூறப்படுகிறது. பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து செயலாளர், ஊராட்சி ஒன்றிய BDO ஆகியோர்கள் இருக்கும் நிலையில், திமுக நிர்வாகி தேசியக் கொடியை ஏற்றி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Views: - 514

0

0