தோட்டத்தில் கிடந்த இரு சடலங்கள்… கள்ளக்காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு..!!

15 April 2021, 4:33 pm
karur suicde - updatenews360
Quick Share

கரூர் : கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை அருகே கலிங்கப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவபாக்கியம் (29), தற்போது கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் டைப்பிஸ்ட் ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் சதீஷ் என்பவருக்கும் திருமணம் ஆகி, கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று தனியாக வசித்து வருகிறார். இவருக்கும், நல்லாகவுண்டம் பட்டியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி ஆறுமுகம் என்பவருக்கும், பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த கள்ளக்காதல் குறித்து ஆறுமுகத்தின் மனைவி பொம்மியம்மாளுக்கு தெரிய வரவே, தனது கணவரிடம் தட்டி கேட்டு சண்டையிட்டு உள்ளார். இதனால், கள்ளக்காதல் ஜோடிகள் நேற்று இரவு ஆறுமுகத்தின் தோட்டத்தில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் சிவபாக்கியம் முன்னதாக இறந்துவிட்ட நிலையில், ஆறுமுகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 33

0

0