கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை…. தட்டிக்கேட்ட முதியவருக்கு தர்ம அடி… அமைச்சரின் சொந்த ஊரிலேயே அராஜகம்!!

Author: Babu Lakshmanan
7 September 2021, 6:30 pm
karur attack - updatenews360
Quick Share

கரூரில் அரசு மதுபான கடையில் மதுபாட்டிலை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததை தட்டுகேட்ட முதியவரை தடியால் மேலாளர் அடிக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு மதுபானக் கடைகளில் மதுபாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலை வசூலிப்பதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனை தமிழக அரசும் கண்டும் காணாமல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாதா..? என்று குடிமகன்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த நிலையில், கரூர் மாவட்டம் கா.பரமத்தி ஒன்றியம் தென்னிலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையில், ரூ.10 கூடுதலாக வைத்து மதுபாட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனை வாங்கிய முதியவர் ஒருவர், மேலாளரிடம் கேட்ட போது, முதியவர் என்று கூட பாராமல், அவரை தடியால் தாக்குகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரிலேயே, மதுபானத்தை கூடுதல் விலைக்கு விற்றது மட்டுமல்லாமல், தட்டிக் கேட்ட முதியவரை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், விமர்சனத்திற்குள்ளும் ஆளாக்கியுள்ளது.

Views: - 398

0

0