கடை வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்… கண்டுகொள்ளாத போலீஸார்… ஜேப்படி மன்னர்கள் குஷி!!

Author: Babu Lakshmanan
3 November 2021, 8:53 am
karu rush up - updatenews360
Quick Share

கரூர் : கரூரில் முக்கிய கடை வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றச்சம்பவங்களை தடுப்பதிலு போலீசார் அலட்சியம் காட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளைகொண்டாடப்படுவதை முன்னிட்டு, கரூரில் பொதுமக்கள் ஜவுளிக் கடைகளில் புத்தாடை எடுப்பதற்காக குவிந்து வரும் பொதுமக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலை வீதிகளான ஜவகர் பஜார், திருவள்ளுவர் மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் தரை கடை அமைத்திருப்பதால் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

பண்டிகை காலத்தில் போக்குவரத்து போலீசார் முறையாக பேரிகார்டு அமைத்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளாததால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும், கரூர் நகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கோபுரம் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க போலீசார் இல்லாததால் குற்ற சம்பவங்கள் ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Views: - 327

0

0