அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பு… உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு : கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்யும் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
30 September 2021, 2:17 pm
karur election skip - updatenews360
Quick Share

கரூர் : கரூர் அருகே ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி குடியிருப்பு வாசிகள் கருப்பு கொடி கட்டி, டிஜிட்டல் பேனர் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் வடக்குப் பாளையத்தை அடுத்து உள்ளது குமரன் குடில் மற்றும் குமரன் லே அவுட் குடியிருப்பு பகுதிகள். புறநகர் பகுதியில் 8 வருடங்களுக்கு முன்பு உருவான சுமார் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி கடந்த 8 ஆண்டுகளாக மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டவர்களிடம் பல முறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், அடிப்படை வசதிகளை அரசு செய்து தராத நிலையில், தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி பொதுமக்கள் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர். குடிக்க தண்ணீர் இல்லை, கழிவுநீர் வடிகால் இல்லை, நல்ல சாலைகள் இல்லை, இந்த தேர்தலில் நாங்கள் வாக்களிக்கப் போவதும் இல்லை எனக் கூறி டிஜிட்டல் பேனர்களும், கருப்பு கொடி கட்டிய கம்பங்களும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான 8வது வார்டில் இப்பகுதி உள்ளதாகவும், நடைபெறும் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 314

0

0