தமிழ் திரையுலகின் கட்ட பஞ்சாயத்து கூட்டமே…? சீறிய சிம்பு போஸ்டர்களால் கரூரில் பரபரப்பு

Author: Udhayakumar Raman
23 October 2021, 8:32 pm
Quick Share

கரூர்:நடிகர் சிம்புவின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் தமிழ் திரையுலகின் கட்டப்பஞ்சாயத்து கூட்டத்தின் மீது உடனே நடவடிக்கை கோரி கரூரில் சிம்பு ரசிகர் மன்றத்தின் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கரூர் பேருந்து நிலையம், மினிபேருந்து நிலையம், வெங்கமேடு, காந்திகிராமம், புலியூர், கரூர் சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசே நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு என்று போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் தற்போது தமிழக அளவில் பெருமளவில் வைரலாகி வருகின்றது. அந்த போஸ்டரில், சிலம்பரசன் தந்தையும் நடிகருமான டி.ஆர் என்கின்ற டி.ராஜேந்திரன் புகைப்படம் சிறிய அளவிலும், அதே அளவில் சிலம்பரசன் ரசிகர் மன்ற அகில இந்திய தலைவர் டி.வாசு அவர்களின் புகைபடமும், ஒரு புறம் நடிகர் சிலம்பரசன் கையை நீட்டுவது போல, அந்த கைக்கு அருகிலேயே எங்கள் ஆருயிர் அண்ணன் சிலம்பரசன் TR அவர்களின் வளர்ச்சியை தடுக்க நினைக்கும் தமிழ் திரையுலகின் கட்டப்பஞ்சாயத்து கூட்டத்தின் மீது உடனே நடவடிக்கை எடு என்று அந்த போஸ்டரின் இறுதியில் அகில இந்திய தலைமை நற்பணி இயக்கம், கரூர் மாவட்ட சிலம்பரசன் TR தலைமை நற்பணி இயக்கம் என்றும் அந்த போஸ்டரில் வார்த்தைகள் ளுபோடப்பட்டுள்ளது.

இது குறித்து கரூர் மாவட்ட சிலம்பரசன் ரசிகர் மன்ற தலைவர் சுரேஷ் கூறுகையில்,”எங்களது ஆருயிர் தலைவர் சிலம்பரசன் நடித்து பெருமளவில் வெளி வர இருக்கும் மாநாடு திரைப்படத்தினை திரையிடுவதற்கு திரையுலகினர் சதி செய்வதாகவும், தொடர்ச்சியாக சிம்பு நடித்து வரும் படங்களுக்கு சிவப்பு கார்டு போடுகிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை சிலர் தவறாக பயன்படுத்தி மிரட்டுகிறார்கள். சிம்பு நடித்துள்ள மாநாடு படம் வெளிவர விடாமல் தடுக்கிறார்கள். இது குறித்து ஏற்கனவே, சிம்புவின் தந்தை டி.ஆர் என்கின்ற டி.ராஜேந்தர் மற்றும் தாயார் உஷா ராஜேந்தர் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பேட்டி அளித்தது போல், தீபாவளிக்கு சிம்பு நடித்த மாநாடு படத்தை வெளிவர விடாமல் தடுத்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லும் வகையில் அவரது வீட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்கவும் தமிழக அளவில் உள்ள அவர்களது ரசிகர்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Views: - 311

0

0