டூவீலருக்கு வழிகொடுக்காத டிராக்டர் : வெடித்த வன்முறை… ஒருவர் அடித்துக் கொலை… பதற்றத்தில் கிராமம்..!!

5 July 2021, 3:39 pm
karur murder - updatenews360
Quick Share

கரூர் : டிராக்டரில் மண் அள்ளி சென்ற போது டூ விலருக்கு வழிதராததினால் ஏற்பட்ட பிரச்சினையினால் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மாயனூர் காவிரி கருவறையில் இருந்து பிரிந்து செல்லும் தென்கரை வாய்க்கால் இரண்டு கரை பகுதியிலும், சிமெண்ட் கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கிருஷ்ணராயபுரம் அருகிலுள்ள பிச்சம்பட்டி கிராமத்தில் நடைபெறும் பணிக்காக டிராக்டரில் மண் அள்ளிச் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது, அதே ஊரைச் சேர்ந்த ராஜா (28), பிரபாகரன் (28) என்கின்ற இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் டூவீலரில் டாக்டருக்கு பின்னால் வந்து கொண்டிருந்தனர். அப்போது, பைக் ஓட்டி வந்த இளைஞர்கள் ஹாரன் அடித்து வழி கேட்டுள்ளனர். டிராக்டர் ஓட்டி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் என்ற டிரைவர் பைக்குக்கு வழிவிடாமல் இருந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, இளைஞர்களுக்காக ஆதரவாக அதே ஊரைச் சேர்ந்த பிரபு (35) என்பவரும் டிராக்டர் டிரைவர் செந்தில் ஆதரவாக மன வாசியை சேர்ந்த சூப்பர்வைசர் தர்மதுரை என்பவர் இருவரும் பேசி உள்ளனர். தொடர்ந்து இது குறித்து நாளை பேசிக் கொள்ளலாம் என்று இரண்டு தரப்பினரும் சென்று விட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை பிச்சம்பட்டி பகவதியம்மன் கோயில் முன்பு பிச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் மணவாசி தர்மதுரை ஆதரவாளர்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் வந்துள்ளனர். அப்போது, பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தர்மதுரை ஆதரவாளர்கள் திடீரென்று, தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள், கம்பு, இரும்பு, கம்பி ஆகியவற்றைக் கொண்டு பிரபு தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் தாக்கியுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பிச்சம்பட்டி பகுதி கிராம மக்கள் ஓடினர். தொடர்ந்து பிரபு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து சம்பவ இடத்திற்கு கரூர் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் குளித்தலை டிஎஸ்பி கீதாஞ்சலி மற்றும் போலீசார் பிச்சம்பட்டி கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மணவாசி கிராமம் மற்றும் பிச்சம்பட்டி கிராமத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரபு மற்றும் தர்மராஜ் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இது ஜாதி பிரச்சனையாக உருவெடுக்கும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் பதற்றத்துடன் கூறுகின்றனர்.

Views: - 159

0

0