2 தலைமுறையாக சொத்து பிரச்சனை.. கடைக்குள் புகுந்து இளைஞருக்கு அரிவாள் வெட்டு… சிசிடிவி காட்சியை வைத்து விசாரணை!!

Author: Babu Lakshmanan
6 December 2022, 7:26 pm
Quick Share

கரூர் ; கரூரில் சொத்துப் பிரச்சினை காரணமாக இளைஞரை அரிவாளால் வெட்டிய சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு மாநகர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாநகரில் திருவிகா சாலையில் வசிப்பவர் ஜோதி லிங்கம் இவரது மகன் இளமுருகன் என்கின்ற கார்த்தி (33). திருமணமாகி விட்ட நிலையில், மனைவியுடன் சேர்ந்து துணி மற்றும் ரெடிமேட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், நேற்று மாலையில் கணவன், மனைவி இருவரும் கடையினுள் அமர்ந்திருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பங்காளி வீட்டு இளைஞர்கள் 2 பேர் கடையினுள் புகுந்து கார்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.

கை மற்றும் முதுகு பகுதியில் வெட்டுக் காயங்களுடன் வெளியில் வந்த கார்த்தி அவர்களை பிடிக்க முயன்ற போது தப்பியோடி விட்டனர். இதனை தொடர்ந்து, கார்த்தியை அருகில் இருந்தவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த மாநகர காவல் நிலைய போலீசார் அருகில் உள்ள கடையில் பொறுத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது குடும்பத்திற்கும், இவர்களது பங்காளி வீட்டிற்கும் 2 தலைமுறைகளாக சொத்துப் பிரச்சினை இருந்து வருவதாகவும், அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 491

0

0