கவின்-லாஸ்லியா பிரேக் அப்-க்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கா..? பொது வெளியில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்.!

Author: Rajesh
13 May 2022, 2:20 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலருக்கும் பிடித்த சீசன் என்றால் அது சீசன் 3 தான். காரணம் அந்த சீசனில் இருந்த போட்டியாளர்கள்.அதற்கு காரணம் இந்த சீசனில் கலந்து கொண்ட கவின், முகின், தர்ஷன், சாண்டி மற்றும் லாஸ்லியா போன்றோர் அவர்களது பாடல் மற்றும் நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தனர். இதில் கவின் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் வெளியே வந்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் இவர்களின் பிரிவுக்கு பின்னால் நடந்த கதையை கவினின் நண்பரும், பிக்பாஸ் பிரபலமுமான ராஜூ பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, ‘கவின் மற்றும் லாஸ்லியா இடையே சண்டை அதிகமாகி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் அளவிற்கு சென்று விட்டார்களாம்.
மேலும் உன்னால் தான் என் வாழ்க்கையே போச்சு என கூறிய லாஸ்லியா என்னுடைய அப்பா கண்ணீருக்கு முன்னாடி நீ எல்லாம் தூசுடா என்று கவினை கூறினாராம். அதேபோல் கவினும் உன்னால் தான் எங்க அம்மா என்னை வீட்டுக்குள்ளேயே விட மாட்டேங்கிறாங்க.

அந்த அளவுக்கு அவமானமா போச்சு. என் நண்பன் என்னை அடிச்சதுக்கு பதில் உன்னை அடிச்சிருக்கனும் என இருவரும் மாறி மாறி சண்டையிட ஒருகட்டத்தில் கைகலப்பு வரை சண்டை சென்றுவிட்டதாக பிக்பாஸ் ராஜூ கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Views: - 817

8

7