உயிரிழந்த தாய் யானை அருகே அழுது கொண்டே சுற்றி சுற்றி வந்த குட்டி யானை!! உருக வைத்த காட்சி!!

23 January 2021, 7:18 pm
Elephant Cry - Updatenews360
Quick Share

கேரளா : திருவனந்தபுரம் அருகே விதிரா 26ம் மைல் என்ற பகுதியில் வனத்தை ஒட்டிய ரப்பர் தோட்டத்தில் உயிரிழந்த காட்டு யானை அருகே குட்டி யானை அழுது கொண்டு நின்ற காட்சிகள் காண்போர் கண்களில் கண்ணீர் வரவைத்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதிரா 26ம் மைல் என்ற பகுதியில் வனத்தை ஒட்டிய ரப்பர் தோட்டத்தில் உயிரிழந்த காட்டு யானை அருகே குட்டி யானை அழுது கொண்டிருந்தது.

சுற்றி சுற்றி குட்டி யானை வலம் வந்ததை பார்த்த ரப்பர் பால் வடிக்கும் தொழிலாளிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் வந்து பார்க்கும் போது யானை உயிரிழந்தது தெரியாமல் அதை எழுப்பும் முயற்சியில் குட்டி யானை ஈடுபட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து குட்டி யானையை மீட்டு நெய்யார் வன பகுதிக்கு கொண்டு வந்து அங்குள்ள முகாமில் அடைத்துள்ளனர். மேலும் யானையின் உடல் பகுதியில் காயம் இல்லாத நிலையில் விஷம் வைத்து கொன்றார்களா ?அல்லது ஏற்கனவே நோய் வாய்ப்பாட்டு இறந்தனவா என வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கால்நடை மருத்துவ குழு யானையை உடல்கூறு ஆய்வு செய்த பிறகே தெரிய வரும். உயரிழந்த தாய் யானையின் அருகே அழுதவாறு நின்ற குட்டியானையின் செயல் காண்போர் கண்களில் கண்ணீர் வரவைத்துள்ளது.

Views: - 0

0

0