‘அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ : ஏ.ஆர். ரகுமான் இரங்கல்..!
8 August 2020, 12:48 pmகோழிக்கோடு : கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நேற்று துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு வந்து தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கொரோனாவால் நாடே துவண்டு போயுள்ள நிலையில், பேரதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த துயர சம்பவத்திற்கு முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் தனது பங்கிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “அன்பானவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதுவும் கடந்து போகும்,” என அவர் பதிவிட்டுள்ளார்.