கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்கள் – ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி..!

19 August 2020, 4:18 pm
Quick Share

கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி அடுத்த ராஜமலை பகுதியில் கடந்த 7-ஆம் தேதி கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் கயத்தாறு, சங்கரன் கோவில், ராஜபாளையம், புளியங்குடி, தென்காசி, பாஞ்சாலங்குறிச்சி, சென்னை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த நிலையில் நிலச்சரிவில் சிக்கி, தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் உள்பட 82-க்கும் அதிகமானோர் மண்ணின் அடியில் புதையுண்டனர்.

அவர்களை மீட்கும் பணி கடந்த 12 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ள நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொதுநிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நிலச்சரிவில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0