கேரள மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ : அலறியடித்து ஓடிய பயணிகள்!!

17 January 2021, 12:07 pm
Malabar Train Fire- Updatenews360
Quick Share

கேரளா : மங்களுர் பகுதியிலிருந்து திருவனந்தபுரம் வந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் ரயில் நிறுத்தப்பட்டது.

கேரளா மாநிலம் மங்களுர் பகுதியிலிருந்து திருவனந்தபுரம் வந்த மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் பார்சல் பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலில் பார்சல் வைத்திருக்கும் பெட்டியில் தீ பரவியதை தொடர்ந்து இடைவை பகுதியில் ரயிலை நிறுத்தி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் பயணித்த மற்ற பெட்டிகளில் தீ பரவாமல் இருந்தால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது. மேலும் அந்த வழியாக இயக்கப்பட உள்ள மற்ற ரயில் சேவை நிறுத்தம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 5

0

0