கோவையில் இருந்து ஹவாலா பணம் கடத்தல் : ரூ.77.5 லட்சம் ரொக்கத்துடன் கேரள இளைஞர் கைது!!
21 November 2020, 2:21 pmகோவை : கோவையில் இருந்து ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் வாகன சோதனையின் போது கைது செய்தனர்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், மாநிலம் முழுவதும் போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு பாலக்காடு மாவட்டம் புதுசேரி பகுதியில் பாலக்காடு போலீஸ் மற்றும் கலால் துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவையில் இருந்து திருச்சூர் நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தில் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இன்றி சுமார் ரூ.77.5 லட்சம் ரூபாய் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை கடத்த முயன்ற பாலக்காடு வடகரபதி பகுதியை சேர்ந்த மனோஜ் என்பவரை கலால் துறை அதிகாரிகள் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவரிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர். தேர்தல் நேரம் என்பதால் கோவையில் யாருடமிருந்து யாருக்கு இந்த ஹவலா பணம் கடந்தப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
0
0