RRR-படத்தின் வசூலை மிஞ்சிய கே.ஜி.எப்-2.. இது வேற லெவல்ல இருக்கே..!

Author: Rajesh
8 May 2022, 12:42 pm
kgf-2-updatenews360-1
Quick Share

இந்த வருடத்தில் கே.ஜி.எப் 2 படம் இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு படமாகும். இந்த படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி, தற்போது வரை வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதுவும் தமிழகத்தில் பீஸ்ட் படத்தையே ஓரங்கட்டி கே ஜி எப் 2 வசூல் வேட்டை தான்.

 KGF-2

இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர் ஆர் ஆர் படம் உலகம் முழுவதும் ரூ 1150 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதை கே ஜி எப் 2, 4 வாரத்தில் முறியடித்து ரூ 1155 கோடிகள் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியும் இப்படம் ரூ 1300 கோடி வரை வசூல் செய்யும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Views: - 730

0

0