திரையரங்கில் சிங்கம் போல் கர்ஜிக்கும் யாஷ், திரை தீ பிடிக்க வெளிவந்த கேஜிஎஃப் 2 விமர்சனம்..!

Author: Rajesh
14 April 2022, 12:20 pm
Quick Share

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்கில் கேஜிஎஃப் முதல் பாகம் வெளியானது. கன்னட மொழி திரைப்படமான இப்படம் வெளிவந்த பொழுது யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை, திரையரங்குகளில் ஒரு சாதாரண படமாகவே கடந்து சென்றது.
தொடர்ந்து ஓடிடி மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியான பின்பு தான் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது.

இதனால் கேஜிஎஃப் இரண்டாம் பாகம் எப்பொழுது வெளியாகும் என்று இந்தியா முமுவதுமே ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்த சூழ்நிலையில் தான் இன்று உலகம் முழுவதும் வெற்றிகரமாக திரையரங்கில் வெளியாகி உள்ளது.
முதல் பாகத்தில், பம்பாயில் யாருக்கும் அடங்காத ரவுடியாக அறிமுகான காதநாயகன், பெங்களூருவில் உள்ள தங்க சுரங்கத்தை எப்படி கைப்பற்றுகிறார் என்பதுடன் படம் முடிவடைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இரண்டாம் பாகம் தொடங்குகிறது. முதல் பாதியில் கதை சொன்ன அனந்த் நாக் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, அவரது மகனான பிரகாஷ்ராஜ் மீதி கதையை சொல்கிறார்.

இந்த கதையில் வேறு யாரும் நடித்திருக்க முடியாத அளவிற்கு, மாஸ் காட்டியிருப்பார் படத்தின் கதாநாயன் யாஷ். அவருக்கு கொடுக்கப்படும் அதிகப்படியான பில்டப்புகள் எல்லாம் நம்பும் படியாகவே இருந்தன. முதல் பாதியில், சஞ்சய் தத்திற்க்கு ஆங்காங்கே பில்டப் கொடுக்கப்பட்டிருந்தது. ஏன் அந்த பில்டப் கொடுக்கப்பட்டது என்பதற்கு இரண்டாம் பாதியில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார் சஞ்சய் தத்.

யாஷிற்கு எதிராக அவர் நின்று சண்டையிடும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களின் ஆரவாரங்களால் திரையிரங்குகள் சும்மா அதிறுது. ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இந்த படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்து. ஆனால் அவை எல்லாவற்றையும் மறக்கடிக்கும் அளவிற்கு யாஸ் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருப்பார். இதற்கு மேல் இது போல் ஒரு படத்தை யாரும் எடுத்துவிட முடியாது என்று சொல்லும் அளவில் படத்தை இயக்கி உள்ளார் பிரசாந்த் நீல்.

தன் அம்மாவிடம் யாஷ் சொல்லிய ஒரு வார்த்தையை மையக்கருவாக வைத்து கொண்டு இப்படி ஒரு மிரட்டலான திரைக்கதையை அமைத்துள்ளார். இடைவெளிக்கு முன்பு வரக்கூடிய சண்டைக்காட்சி, இரண்டாம் பாதியில் வரும் போலீஸ் ஸ்டேஷன் காட்சி, பாராளுமன்றத்தில் நடைபெறும் காட்சி போன்றவை பிரம்மாண்டத்தின் உச்சம்.
கேஜிஎஃப் முதல் பாகத்தினை அனைவருமே கிட்டத்தட்ட 10 முதல் 15 தடவைக்கு மேல் பார்த்திருப்போம், ஆனாலும் எங்கும் சலிப்புத் தட்டாது. அதேபோல் தான் கேஜிஎப் 2 படமும் உள்ளது. ஒவ்வொரு சீனும் காட்சிப்படுத்திய விதம், பிஜிஎம் என ஒவ்வொன்றுமே இக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஓடும் இக்கதை ஒரு இடத்திலும் போர் அடிக்கவில்லை. கேஜிஎப் 2 திரைப்படம் இதற்கு முன்பு வசூல் சாதனை புரிந்த படங்களை அடித்து நொறுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆக்சன் காட்சிகளை போலவே சென்டிமென்ட் காட்சிகளும் மனதில் நிற்கிறது. ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனக்கான வேலையை கச்சிதமாக செய்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் அர்ச்சனா ஜோயிஸ் மொத்தமாக ஒரு அரை மணி நேரமே வந்தாலும் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி உள்ளார். சிறந்த பான் இந்தியா படமாக உருவாகி உள்ள கேஜிஎப் படத்தை மக்கள் ரசிக்கும் படியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை..

Views: - 887

0

0