குலசை தசரா திருவிழாவில் 2 வயது குழந்தை கடத்தல் : அதிகரிக்கும் சம்பவங்கள்.. போலீசாருக்கு காத்திருந்த ட்விஸ்ட்!!
திருவெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்த நரிக்குறவ பெண் அம்சவள்ளி. இவர் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற இந்த தசரா திருவிழாவினை முன்னிட்டு கோவில் பகுதிகளில் தங்கியிருந்து பாசிமாலை விற்பனை தொழில் செய்துவருகிறார்.
இந்தநிலையில் அதிகாலையில் இவரது 2 வயது பெண் குழந்தை
கார்த்திகை வள்ளியை காணவில்லை. இதனையடுத்து குலசேகரன்பட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அதிகாலை சுமார் 4 மணியளவில் மர்ம நபர்கள் இரண்டு பேர் இரு சக்கர வாகனத்தில் கடத்திச்சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 5-ம் தேதி குலசேகரப்பட்டினம் கோவிலில் மாலை அணிவிக்க வந்த கன்னியாகுமரி மாவட்டச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றி ஒன்றரை வயது ஆண் குழந்தையை கடத்திச்சென்றனர்.
தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை விற்பனை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்க்கது. இந்த நிலையில் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் இரண்டு வயது பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.