தொடர் மழை.. எங்கும் தண்ணீர்… பூங்காவில் குளம் போல் தேங்கிய நீரில் ஆபத்தை உணராமல் குளியல் போட்ட குழந்தைகள்..! மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?…

Author: Vignesh
7 November 2022, 11:24 am
Rain - updatenews360.jpg 2
Quick Share

கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஜேஜே பூங்காவில் தேங்கிய மழை நீரில் குதூகலமாக குளியல் போடும் குழந்தைகள்.

கோவையில் தொடர்ந்து வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் குனியமுத்தூர் 88 வது வார்டு அரசினர் காலனி பகுதியில் அமைந்துள்ள ஜே ஜே பூங்காவில் தேங்கி கிடக்கும் மழை நீரில் ஆபத்தை உணராமல் உற்சாகமாக ஆனந்த குளியல் போடும் குழந்தைகள்.

Rain - updatenews360.jpg 2

பனி மற்றும் மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். இதுபோன்ற தேங்கிய நீரில் குளிப்பதால் மனித ஆபத்தை விளைவிக்க கூடிய விஷ பூச்சிகளும், மலேரியா கொசுக்களால் நோய் தொற்றும் அபாயம் ஏற்படக்கூடும்.

மனதில் கொண்டு அரசும் விரைவாக இது போன்ற இடங்களில் தேங்கிய உடனடியாக வெளியேற்றவும் சார்பாக அரசிற்கு வலியுறுத்தப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் அரசு மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கையாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சில சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றன.

Views: - 183

0

0