மழையால் மடிந்து போன வெள்ளை பூண்டு : நிவாரணம் வழங்க கொடைக்கானல் விவசாயிகள் கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2021, 2:10 pm
Garlic - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் அவ்வப்போது பெய்து வரும் மழையால் வெள்ளைப்பூண்டு விவசாயம் பாதிப்படைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வந்தது. இந்நிலையில் கொடைக்கானல் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

தற்போது அதிக அளவில் உருளை கிழங்கு, வெள்ளைப்பூண்டு, கேரட் உள்ளிட்டவை அதிக அளவில் பயரிட்டு வருகின்றனர். அவ்வப்போது பெய்து வந்த மழையால் கொடைக்கானலில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதில் வெள்ளைப்பூண்டு விவசாயம் செய்து வரும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மழையால் பூண்டு விவசாயம் குறைந்துள்ளதாகவும் விலையும் குறைந்து விற்பனை ஆவதாக மலைவாழ் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கையும் எழுந்துள்ளது ..

Views: - 653

0

0