தேர்தல் விதிகளை மறந்த கொடைக்கானல் : அரசியல் தலைவர்கள் படம் அகற்றாததால் அதிருப்தி!!

1 March 2021, 3:03 pm
election Rules Break up -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் கொடைக்கானலில் அரசியல் கட்சியின் பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் சுவரொட்டிகள் ஆகியவை அகற்றபட வேண்டும்.

ஆனால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரது புகைப்படங்களும் மற்றும் திமுகவின் ஸ்டாலின் விளம்பரங்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து புகைப்படங்களும் அகற்றப்படாமல் இருப்பது அனைவரின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து உடனே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 8

0

0