கொரோனாவின் கொரவலியை பிடித்த கொடைக்கானல்..!! (வீடியோ)

15 February 2020, 5:01 pm
Kodai Corona - updatenews360
Quick Share

திண்டுக்கல் : சினிமா பாட‌ல்கள் மற்றும் வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌ம் கொரோனா வைர‌ஸ் குறித்து கொடைக்கான‌ல் அர‌சு க‌ல்லூரி மாண‌விக‌ள் சுற்றுலாப‌ய‌ணிக‌ள் ம‌ற்றும் பொதும‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு கலைக் கல்லூரி பொது சேவை துறையை சேர்ந்த‌ மாணவிகள் கொரோனா வைரஸ் குறித்து பிரைய‌ண்ட் பூங்கா ப‌குதி அருகே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிக‌ழ்ச்சியில் கொரோனா வைரஸ் ப‌ர‌வும் வித‌ம் குறித்தும் , அத‌னை த‌டுக்க‌ மேற்கொள்ள‌ வேண்டிய‌ ந‌டை முறைக‌ள் குறித்தும் எடுத்துரைக்க‌ப்ப‌ட்டது. தொட‌ர்ந்து சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் பொதுமக்க‌ளை க‌வ‌ரும் வித‌மாக‌ சினிமா பாட‌ல்க‌ள் மூல‌மாக‌வும் , வ‌ச‌ன‌ங்க‌ள் மூல‌மாக‌வும் ந‌ட‌ன‌ங்க‌ள் ஆடியும் , நாட‌க‌ங்க‌ள் ந‌டித்தும் தற்காத்து கொள்ள‌ விழிப்புண‌ர்வு ஏற்ப‌டுத்தின‌ர்.

இத‌னை ஏராள‌மான‌ சுற்றுலா பய‌ணிக‌ள் பொதும‌க்க‌ள் க‌ண்டு ர‌சித்த‌ன‌ர் ..இந்நிக‌ழ்ச்சியில் க‌ல்லூரி மாண‌விகள், பேராசிரிய‌ர்க‌ள் என‌ ஏராள‌மானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.