பிணைய ஒப்பந்தத்தை மீறி போதை காளான் விற்பனை… கொடைக்கானலில் வியாபாரிகளுக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை விதிப்பு

Author: Babu Lakshmanan
4 August 2022, 12:42 pm
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் ஆறு மாத நன்னடத்தை பிணைய ஒப்பந்தத்தை மீறிய, போதை காளான் கஞ்சா வியாபாரிகளுக்கு முதன்முறையாக ஆறு மாத கடுங்காவல் தண்டனை விதித்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை கிராமமான மன்னவனூர் கிராமப் பகுதியில் வைரவேல் (32), லட்சுமணன் (38), மதன் (24) குணசேகரன் (52) ஆகியோர் பல நாட்களாக கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்கள் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் பலமுறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக தங்கள் இந்தத் தவறை மீண்டும் செய்ய மாட்டோம் எனக்கூறி, கடந்த 15.07.22 அன்று கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன் பரிந்துரையின்படி, கொடைக்கானல் வட்டாட்சியர் முத்துராமன் முன்னிலையில் ஆறு மாத கால நன்னடத்தை பிணையப்பத்திரம் எழுதி கையெழுத்திட்டுள்ளனர்.

ஆனால் இரண்டு நாட்களிலேயே தங்களது நிலையை மாற்றி மீண்டும் போதைக்காளான், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு 18.07.22- அன்று கொடைக்கானல் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நால்வர் மீதும் நன்னடத்தை பிணைய ஒப்பந்தத்தை மீறிய காரணத்தால் ஆறு மாத காலம் பிணையில் வெளியில் வராத முடியாத கடுமையான தண்டனை வழங்க தாசில்தார் முத்துராமன் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொடைக்கானல் காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

Views: - 569

0

0