மலைகளின் இளவரசிக்கு அரணான பனி : ரம்மியமான காட்சி தரும் கொடைக்கானல்!!

19 January 2021, 12:50 pm
Kodai FOG - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : கொடைக்கானலில் உறை பனி சீசன் மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு உரை பனி சீசன் தொடங்கியது. அந்த உரை பனி பொழிந்து அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 10 தினங்களுக்கு மேலாகதொடர் மழை பெய்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் மழை நின்றது. இதையடுத்து உறைபனி தற்போது துவங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் உரை பனியின் தாக்கம் அதிகரிக்க துவங்கும் என்று வானிலை ஆய்வு மைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தற்போது 8 டிகிரி செல்சியஸ் அளவிற்கு சீதோசன நிலை உள்ளது. இது மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புல் மேல் படர்ந்த பனி மூட்டத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Views: - 0

0

0