கோடநாடு எஸ்டேட் கணினி இயக்குநர் தற்கொலை : மறு விசாரணை தொடக்கம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
21 September 2021, 10:33 am
Kodanad Suicide - Updatenews360
Quick Share

கோடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தினேஷ் தந்தை போஜனிடம் இன்று மறுவிசாரணை தொடங்கியுள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏடிஜிபி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை அமைத்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2017ல் இறந்த தினேஷ்குமார் மரணம் குறித்து தனிப்படை போலீசார் மீண்டும் விசாரிக்க முடிவு செய்தனர்.

இதனையடுத்து, கோடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தினேஷ் தந்தை போஜனிடம் இன்று மறுவிசாரணை தொடங்கியுள்ளது.

தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு யாரேனும் நெருக்கடி கொடுத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரது தந்தை போஜனிடம் தனிப்படையைச் சேர்ந்த உதகை டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.

Views: - 210

0

0