கொடநாடு கொலை கொள்ளை வழக்கு : வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!!

3 September 2020, 2:52 pm
Kodanadu Murder Case - Updatenews360
Quick Share

நீலகிரி : கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட10 பேரில் நான்கு பேர் மட்டும் இன்று ஆஜராகிய நிலையில் மறுவிசாரணை இம்மாதம் 8 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ம் ஆண்டு நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கினை 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் இன்று ஆஜராக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று கோவை மத்திய சிறையிலுள்ள சயான், வாளையார் மனோஜ், மனோஜ் சாமி மற்றும் உதயகுமார் ஆகிய நான்கு பேர் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய 5 பேருக்கு பிடிவாரண்ட் பிறபித்துள்ள நிலையில் போலீசார் இவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கின் மறு விசாரணை இம்மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 10 பேரும் 8ம் தேதி உதகை அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

Views: - 0

0

0