கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு : விசாரணை ஒத்திவைத்து உத்தரவு!!

8 September 2020, 3:14 pm
Kodanadu Case - updatenews360
Quick Share

நீலகிரி : கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 7 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதி முன்பு இன்று ஆஜரான நிலையில் வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையானது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் இச்சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள வாளையார் மனோஜ், சயான் உட்பட 10 பேரும் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இன்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் இன்று 7 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை எந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்து ஆஜராகாத மீதமுள்ள மூன்று பேரையும் ஆஜராக உத்தரவிட்டார்.

Views: - 6

0

0