பொதுமக்களை மிரட்ட மீண்டும் வந்த கொம்பன் : 2வது நாளாக அட்டகாசம்!!

16 November 2020, 11:24 am
Sathy Elephant - Updatenews360
Quick Share

ஈரோடு : இரண்டாவது நாளாக, பவானிசாகர் அணை பழத்தோட்டத்தில் இருந்து கதவை திறந்து வெளியே வந்த காட்டு யானையால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள பகுதியில் பழத்தோட்டம் உள்ளது. அணையின் மேல்பகுதியில் இருந்து பழத்தோட்டம் வழியாக கீழிறங்கி சாலையில் வந்தால், பவானிசாகர் நகருக்குள் செல்லும் வழி உள்ளது.

பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து இரண்டாவது நாளாக, வெளியேறிய காட்டு யானை நேற்று பழத்தோட்டத்தின் வழியாக நடந்து வந்தது.

கதவை திறந்து வெளியே வந்த காட்டுயானை, புங்கார் செல்லும் சாலையில் நடந்து சென்று, அங்குள்ள கரும்புத் தோட்டத்தில் புகுந்து தஞ்சமடைந்துள்ளது. அங்கு உள்ள குடியிருப்பு வாசிகள், வீட்டை விட்டு வெளியே வந்து சத்தமிட்டு யானையை துரத்தினர்.

பவானிசாகர் வனத்துறையினர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என புங்கார் காலனி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Views: - 26

0

0