கோவை வைதேகி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு : அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஆய்வு!!

21 September 2020, 6:42 pm
Cbe Vaithegi Falls - updatenews360
Quick Share

கோவை : வைதேகி நீர்வீழ்ச்சி அருகே சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழகம் முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டி உள்ள பெரும்பாலான நீராதாரங்கள் முழுவதுமாக நிரம்பும் தருவாயில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பருவமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. எனவே சிறுவாணி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் கோவை வைதேகி நீர்வீழ்ச்சி நீரின் அளவு அதிகரித்து வருகிறது. நீரின் அளவு படிப்படியாக உயர்ந்து வருவதால் வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் கண்காணித்து வருகின்றனர். மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது,

இந்த சூழ்நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதிகாரிகளுடன் எந்தெந்த பகுதிகளில் வெள்ள நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, மேலும் நீர் வழித் தடங்களை எப்படி புனரமைப்பது என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.