200 டன் மீன்கள் மடிந்தன : வாழ வழியில்லாமல் மீனவர்கள் கண்ணீர்.!!

1 May 2020, 6:02 pm
Krishnagiri 200 ton Fish - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : கே.ஆர்.பி. அணைகதவு மற்றும் மதகு பணிக்காக. தண்ணீர் வெளியேற்றபட்டதால் பல கோடி மதிப்பிலான மீன்கள் செத்து மிதக்கிறது.

கிருஷ்ணகிரிஅணையின் கதவுகள் மற்றும் மதகுகள் கடந்த ஒரு வருடமாக சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அனையின் நீர்மட்டம் 49 – அடியிருருந்து 36 – அடியாக குறைக்கபட்டது.

இந்த நிலையில் அனையை சுற்றிவுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 700 – குடும்பங்கள் ஒன்றுசேர்த்து. அனையை 4-கோடியே 16 – லட்ச ரூபாய்க்குக்குஏலம் எடுத்து பல லட்சம் மீன்களை விட்டனர். இந்த நிலையில் பொதுபணித்துறை அதிகாரிகள் அணையில் தண்ணீர் மட்டத்தைகுறைத்து வந்தனர்.

இதைதொடர்ந்து நாடேங்கும் கொரானா தொற்று தடுப்பு நடவடிக்கையாக. ஊரடங்கு பிறவிக்கபட்டதால் அனையில் மீன் பிடிக்க தடை விதிக்கபட்டது.

இந்தநிலையில் அணையின் முழு தண்ணீரையும். அதிகாரிகள் வெளியேற்றியதால் சேற்றுடன் கலந்து 200 டன் மீன்கள் வெளியேறியது. அத்தனை மீன்களும் உயிர்வாழ தண்ணீர் இல்லாததால் செத்து மிதக்கும் காட்சியை பார்த்து குத்தகை எடுத்த மீனவர்கள் செய்வதறியாமல் வேதனையில் நிற்கின்றனர்.

இதுகுறித்து பர்வதமீனவர் குலசங்கத்தை சேர்ந்த மீனவர் மாதேஷ் கூறுகையில், 700 – குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய அணை மீன்கள், வெளியேற்றபட்டதால் தங்கள் கண்முன்பாகவே செத்து மிதப்பதை பார்க்க முடியாமல் வேதனையில் நிற்பதாகவும், மீன்பிடிப்பது தவிர வேறு வாழ்வாதாரம் தங்களுக்கு இல்லை என வேதனை தெரிவித்தனர்.

ஊரடங்கு அறிப்பால் மீன்களை பிடிக்க முடியாமல் தற்போது செத்து மிதக்கும் மீன்களை நோய்தொற்று பரவாமல் இருக்க, இறந்த மீன்களை வாகனத்தில் எடுத்து சென்று புதைத்து வருகிறோம். பல கோடி ரூபாய் மூதலீடுசெய்து தற்போது நிர்கதியாய் நிற்கிறோம் எனவே தமிழக அரசு எங்கள் வாழ்வாதரத்தை காக்க உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.