வாகன சோதனையின் போது தப்பிய ஓட்டுநர்.!! ரூ.4 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்!!
11 August 2020, 4:47 pmகிருஷ்ணகிரி : வாகன சோதனையில் ஈடுபட்ட போது வேன் ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், வாகனத்தை சோதனை செய்த போது ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி காவல் நிலைய போலீசார் இன்று அதிகாலை பந்தாரப்பள்ளி என்னுமிடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேனை நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
போலீசாரின் சோதனையில், வேனில் ரூபாய் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து குட்கா மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.