வரதட்சணை கேட்டு துன்புறுத்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் மகன்..!! (வீடியோ)

23 March 2020, 7:20 pm
Krishnagir Lady Dharna-Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : மாவட்ட ஆட்சியரகத்தில் வரதட்சனைகொடுமை செய்து வீட்டைவிட்டு துரத்திய கணவன் வீட்டார் மீது நடவடிக்கை கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பத்மபிரியா என்ற பெண், கடந்த 2018-ம் வருடம் தேன்க்கனிகோட்டையை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் பாண்டியன் என்பவரின் மகன் விஜயபாஸ்கருக்கு பெரியோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

திருமணமாண முதல் விஜயபாஸ்கர் அவரது பெற்றோரரும் வரதட்சனை கேட்டு துன்புறுத்தியதாகவும் பிறகு பெண் குழந்தை பிறந்ததால் விஜயபாஸ்கர் தனக்கு ஆண் வாரிசு வேண்டும் எனவும். அடித்து கொடுமை செய்துவீட்டைவிட்டு துரத்திவிட்டதாகவும், இதையடுத்து தேன்கனிகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மற்றும் காவல்துணைக்கணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை என பாதிக்கப்பட்ட பத்மபிரியா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மாவட்ட நிர்வாகம் தன்னை அழைத்து விசாரித்து கணவருடன் சேர்ந்து வாழ வைக்க நடவடிக்கை எடுக்க போவதாக கூறினார். தன்னை அடித்து துன்புறுத்தி வரதட்சணை கொடுமை செய்த கணவர் மற்றும் அவரதுபெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம். புகார் மனு அளித்துள்ளதாக கூறினார்.