பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் : செல்போனில் வீடியோ எடுத்து ஷேர் செய்த சக மாணவர்கள்!!

27 September 2020, 12:27 pm
Krishnagiri Rape - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : பிளஸ் 1 படித்து வரும் பள்ளி மாணவியை சக வகுப்பு மாணவர்கள் தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் பகிர்ந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அருகே உள்ள பேட்டப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் சென்னசந்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய, பிளஸ் 2 மாணவர்கள் இரண்டு பேரும் நண்பர்கள் ஆவர். இந்தநிலையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சிறுமியை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள் இருவரும் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இந்த காட்சிகளை செல்போன் மூலம் படம் பிடித்து, சக நண்பரான 15 வயது உடைய ஒன்பதாம் வகுப்பு மாணவருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளனர். அதனை அவர் சக நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார்.

இதை அறிந்த சிறுமியின் தந்தை, குருபரப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆண் நண்பர்களால் சக பள்ளி மாணவி சீரழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண் நண்பர்களிடம் பெண் பிள்ளைகள் வரம்பை மீறி பழகினால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்றாய் அமைந்துள்ளது.