ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்.! ஒரு மணி நேரம் நடுரோட்டில் ஊசலாடிய உயிர்.!

2 August 2020, 5:48 pm
Krishnagiri Murder Attempt - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : இளைஞர் ஒருவரை கத்தியால் வெட்டிய மர்மநபர்கள் தப்பியோடிய நிலையில், ஒரு மணி நேரமாக ஆம்புலன்ஸ் வராததால் ஒரு மணி நேரம் உயிர் ஊசலாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.

கிருஷ்ணகிரி காமராஜர் நகர் பகுதியில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்ல முயற்சி செய்துள்ளதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையம் பின்புறம் பகுதியில் 30- வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் நடுரோட்டில் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு போராடினார்.

தகவலறிந்த ஊர் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தரவே தாலுக்கா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவசர ஊர்திக்கு தகவல் கொடுத்தனர். ஒரு மணி நேரமாகியும் அவசர ஊர்தி வராததால் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளைஞர் உடல் அசைவு ஏதும் இன்றி அமைதியானது .

இதை பார்த்த ஊர் பொதுமக்கள் ஒரு மணி நேரமாகியும் உயிர்காக்கும் அவசர ஊர்தி வராததால் மிகுந்த கோபம் அடைந்தனர். விசாரணை செய்ததில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளைஞரின் பெயர் பவுன்ராஜ் எனவும் பழையபேட்டை முனுசாமி தெருவை சேர்ந்த இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தவர் எனவும் தெரியவந்தது.

இவர் எதற்காக கொலை செய்ய மர்மநபர்கள் முயற்சித்துள்ளனர் எனவும் இது குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர. ஊரடங்கு காலத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0