அரசியல் பற்றி பேசியது கூற முடியாது என சொன்னது கபாலி ரஜினியா அல்லது காவிக்கு பயப்பட்டாரா? கே.எஸ் அழகிரி விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2022, 7:09 pm
Rajini KS Azhagiri - Updatenews360
Quick Share

ஆளுநரை சந்தித்தது குறித்து ரஜினி பேசிய விவகாரத்தில் அரசியல் பேசினோம் அதை கூறமுடியாது என ரஜினி தெரிவித்தது கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என்பதை ரஜினி தான் சொல்ல வேண்டும் என கே எஸ் அழகிரி கூறியுள்ளார்.

இந்தியாவின் 75 வது சுதந்திர அமுத பெருவிழாவினை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து காங்கிரஸ் மாநில தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நடைபயணமாக நான்கு முனை சந்திப்பு வரை சென்றனர்.

அதனை தொடர்ந்து பேட்டியளித்த கே எஸ் அழகிரி காங்கிரஸ் கட்சி, பொதுவுடமை, சோசிலியஸ்ட் கட்சிகள் சுதந்திரதினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஆர் எஸ் எஸ் பாஜகவினர் மூன்றாவது முறையாக சுதந்திர தினவிழாவினை கொண்டாடுவதை வரவேற்பதாகவும், தேசிய கொடியை எந்த சொல்லும் பாஜகவினர் அதன் வரலாற்றை மறைப்பதாக கூறினார்.

வரலாற்றை மறைப்பதன் மூலம் சுதந்திர வரலாற்றை மறைப்பது தெளிவாக விளங்குவதாகவும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர் சுதந்திர கொடியினை ஏற்றுவதற்காக அப்பகுதியினர் தடையாக இருந்துள்ளனர்.

இது சம்பந்தமாக முதலமைச்சருக்கு புகார் சென்றவுடன் நடவடிக்கை எடுத்துள்ளார். முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்தற்கு அண்ணாமலை குறை கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

சனாதனம் என்பது பழமையை பாதுகாப்பது சனாதனத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் போராடி வருகின்றனர். இந்தியாவில் இடஒதுக்கீட்டினை கொண்டுவந்த கட்சி காங்கிரஸ், இடஒதுக்கீட்டிற்கு ஆர் எஸ் எஸ் அமைப்பினர் ஆதரவாக செயல்பட்டதில்லை.

5 ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்ற தீமையை 100 ஆண்டுகளில் காங்கிரஸ் மாற்றியுள்ளது. அண்ணாமலை சனாதனத்தை திரிக்க பார்ப்பதாகவும், கருத்து கணிபுகள் எவ்வளவோ தோல்வி அடைந்துள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என சீ வோட்டர்ஸ் கருத்து கணிப்பு வெளியிட்டது ஒரு கருத்து திணிப்பு என தெரிவித்துள்ளார்…

காவல் துறை அதிகாரிகள் தவறு செய்தால் சர்வதிகாரியாக மாறுவேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். கள்ளக்குறிச்சி கனியாமூர் வழக்கில் அஞ்சலி செலுத்த சென்ற இடத்தில் சிலர் கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக எடுத்தது. தமிழகத்திற்கு பிரதமர் வந்தபோது தமிழக அரசு பேனர் வைத்தபோது பாஜகவினர் மோடியின் படத்தை அதில் ஒட்டியது ஏற்புடையது அல்ல..

ஆளுநரின் அனைத்து கருத்துக்களை நாங்கள் எதிர்ப்பதில்லை ஒரு சில கருத்துகளுக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆளுநரை சந்தித்த ரஜினியின் வார்த்தை என்பது அரசியல் பற்றி பேசினோம் என்று கூறுகிறார். ஆனால் என்ன பேசினோம் என்பதை கூற தவிர்க்கிறார்.

காங்கிரசை பொறுத்தவரை நீட் என்பதை வேண்டாம் என்று தான் கூறுகிறோம். அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் சி பி எஸ் பி பாடத்திட்டம் கொண்டு வந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு பிறகு நீட் தேர்வு நடத்தினால் நாங்கள் ஏற்போம்.

ஆளுநரை சந்தித்தது குறித்து ரஜினி பேசிய விவகாரத்தில் அரசியல் பேசினோம் அதை கூறமுடியாது என ரஜினி தெரிவித்தது கபாலியா அல்லது காவிக்கு பயந்துவிட்டாரா என்பதை ரஜினி தான் பதில் சொல்ல வேண்டும் எனவும் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.

Views: - 416

0

0