இனி இவங்க பாடு அவ்வளவு தான்..ரியல் எஸ்டேட் பார்ட்டிகளுக்கு அடிச்சாரு ஆப்பு.. குமரி மாவட்ட ஆட்சியர் அதிரடி;

19 July 2021, 6:51 pm
Kumari Collector- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கு தடையில்லா சான்று பெற்ற பின்னரே, அனுமதி கோரி மனு செய்ய வேண்டும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில், விவசாயம் அல்லாத மேம்பாடுகள், வீடு மற்றும் கட்டடம் கட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தடையில்லா சான்று பெற்ற பின்னரே, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி கோரி நில உரிமையாளர்கள் மனு செய்ய வேண்டும் .

வேளாண்மை நிலங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறாமல் மண்நிரப்புதல் மற்றும் கட்டிடங்கள் கட்டக்கூடாது எனவும், அவ்வாறு நன்செய் நிலங்களில் மண் நிரப்புதல் மற்றும் கட்டடங்கள் கட்டுபவர்கள் மீது அரசு விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள ஆட்சியர், அவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு மற்றும் மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கபடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 167

0

0