ஆட்டோவை ஓட்டிச் சென்ற குமரி காங்.,எம்பி : விளையாட்டு திடல் சீரமைக்கும் பணியின் போது சுவாரஸ்யம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2022, 4:20 pm
MP Vijay Vasanth Auto - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : விளையாட்டு திடலை சீரமைக்கும் பணியை துவங்கி வைக்க ஆட்டோ ஓட்டி சென்று கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் அசத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியில் உள்ள விளையாட்டு திடலை தனது சொந்த செலவில் சீரமைக்கும் பணியை தொடங்கிவைத்தார் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய் வசந்த்.

மணக்குடி இளைஞர்கள் நீண்ட நாள் கோரிக்கையான, அந்த பகுதியில் உள்ள விளையாட்டு திடலை சீரமைத்து சமன் செய்து தர வேண்டும் என மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஹச்.வசந்த குமார் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில் தனது சொந்த செலவில் அந்த விளையாட்டு திடலை சீரமைத்து சமன் செய்யும் பணியினை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுபினர் விஜய் வசந்த் இன்று துவக்கி வைத்தார்.

முன்னதாக மணக்குடி கிராமத்திற்கு சென்ற எம்.பி. விஜய் வசந்த் ஜே.சி.பி இயந்திரம் மூலம் விளையாட்டு திடலை சீரமைக்கும் பணியைத் தொடங்கி வைக்க தீடிரென ஆட்டோ ஓட்டிச் சென்றது. அங்கு இருக்கக்கூடிய பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வின் போது கிழக்கு மாவட்டம் காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம், துணைத் தலைவர் லாரன்ஸ், வட்டார தலைவர்கள் அசோக் ராஜா, முருகேசன், அகத்தீஸ்வரம் பேரூராட்சித் தலைவர் கிங்ஸ்லின், மணக்குடி தலைவர் விக்டர் மணக்குடி தேவாலைய பங்குத்தந்தை அரூள் ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Views: - 633

0

0