கொரோனா தடுப்பு விதிமீறல் : குமரியில் 51,921 வழக்குகள் பதிவு… அபராதமாக 1 கோடியே 7லட்சம் வசூல்!!

15 May 2021, 4:45 pm
Lockdown_UpdateNews360
Quick Share

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் முகக் கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததாக இதுவரை 51 ஆயிரத்து 921 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களிடம் ஒரு கோடியே 6 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரானா தடை உத்தரவை மீறுவோர் மீது போலீசார் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக மாவட்டம் முழுவதும் கவசங்கள் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருசக்கர வாகனங்களில் தடையை மீறி செல்பவர்கள் என இதுவரை 51 ஆயிரத்து 921 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ஒரு கோடியே 6 லட்சத்து 98 ஆயிரத்து 296 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதேபோன்று மருத்துவமனைகளில் முறையான விதிமுறைகளை கடைபிடிக்தால் இருந்ததற்காக தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தடையை மீறி திருமணம் நடத்திய திருமண மண்டபம் ஒன்றிற்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Views: - 172

0

0