கேரளாவை பின்பற்றி குமரியில் ரம்ஜான் கொண்டாட்டம் : ஒருவரையொருவர் கட்டித்தழுவி மகிழ்ச்சி பரிமாற்றம்..!!!

13 May 2021, 7:20 pm
ramzan - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கேரளாவைப் பின்பற்றி முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் குமரியில் ஒரு நாள் முன்னதாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை நாளை (14ம் தேதி) கொண்டாடப்படும் என தமிழக காஜி அறிவித்தார். ஆனால் கேரளாவில் இன்று ரம்ஜான் கொண்டாடபடுகிறது. கொரோனா ஊரடங்கால் மசூதிகள், பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. அதே நேரம் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வீடுகளில் இருந்தவாறு தொழுகை நடத்தினர்

அதே நேரம் கொரோனா கட்டுப்பாடு தொடர்பான விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட்டன. கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் கேரளாவை பின்பற்றி ஒரு நாள் முன்னதாகவே இன்று ரம்ஜானை ஒருபிருவினர் கொண்டாடினர். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை, திருவிதாங்கோடு, குலசேகரம், களியக்காவிளை, தேங்காய்பட்டணம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை என மாவட்டத்தில் பரவலாக ரம்ஜான் கொண்டாட்டம் அமைதியான முறையில் நடந்தது.

குமரியில் மசூதிகள், பள்ளிவாசல்கள் திறக்கப்படாததால் வீட்டு தளங்கள், மொட்டைமாடி போன்றவற்றில் குடும்பத்தினருடன் சமூக இடைவெளியுடன் முஸ்லீம்கள் தொழுகை நடத்தினர். பின்பு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிகொண்டனர்.

Views: - 113

0

0