குமரி எஸ்.எஸ்.ஐ தூக்கிட்டு தற்கொலை : குடும்ப பிரச்சனை காரணமா என சுசீந்திரம் போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
15 January 2022, 12:50 pm
Quick Share

கன்னியாகுமரி : குடும்ப பிரச்சனை காரணமாக கன்னியாகுமரி அருகே எஸ்எஸ்ஐ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள கடைகிராமம் பகுதியை சேர்ந்தவர் யேசுதாஸ் (52) இவர் கோட்டார் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பிரேமா என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் யேசுதாசுக்கும் அவரது மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று ஜனவரி 14ஆம் தேதி இரவில் அவர் தனிமையில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று 15ம் தேதி காலையில் அவரைத்தேடி அக்கம்பக்கத்தினர் வீட்டு கதவை தட்டி பார்த்தபோது, திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்க்கும் போது ஏசுதாஸ் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்த நிலையில் காணப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து சுசீந்தரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது பற்றி தகவல் கிடைத்ததும் சுசீந்திரம் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஏசுதாஸ் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 263

0

0