தொடர்மழை தள்ளிப்போன கும்பப் பூ சாகுபடி நடவு பணிகள் தொடக்கம் : 2 மாதங்களுக்கு பிறகு மகிழ்ச்சியோடு விளைநிலத்தில் விவசாயிகள்..!!

Author: Babu Lakshmanan
7 December 2021, 11:42 am
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் இரண்டு மாத காலதாமதத்திற்கு பின் கும்பப் பூ சாகுபடி நடவு பணி தொடங்கியது.

குமரி மாவட்ட விவசாயத்தில் நெற்பயிர் விவசாயம் முதன்மை வாய்ந்ததாக விளங்குகிறது. இங்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹெக்டேர் விளைநிலங்களில் நெற்பயிர்கள் பயிரப்படுகிறது. இந்த நெற்பயிர்கள் கன்னிப்பூ, கும்ப பூ என ஆண்டுக்கு இரண்டு பருவங்களாக பயிரிடப்படும்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வேண்டிய கும்ப பூ சாகுபடி, மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தள்ளிப்போனது. இந்த நிலையில் அகஸ்தீஸ்வரம், கொட்டாரம், அஞ்சுகிராமம், அச்சன்குளம், நாடான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாம் பருவ பயிரான கும்ப பூ சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.

இதற்காக விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் உழவு பணியை முடித்து, உரங்கள் போட்டு தற்போது நடவு பணி தொடங்கியுள்ளனர்.

Views: - 282

0

0