தொடர் செயின் பறிப்பு குற்றங்கள்… 5 பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தனிப்படை!!

17 July 2021, 12:34 pm
kumbakonam snatching - updatenews360
Quick Share

தஞ்சாவூர் : கும்பகோணத்தில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை எஸ்பி தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தன. இதனால், குற்றவாளிகளை விரைந்து பிடிக்க, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுபடி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மோகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, காவலர்கள் ரமேஷ், ஜம்புலிங்கம், சண்முகசுந்தரம், கதீஷ், சுரேஷ், உமாபதி, வேளாங்கன்னி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

கடந்த 2 மாதமாக தொடர்ந்து 36 இடங்களில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த அஜய்குமரன், சாண்டி என்கிற சந்தோஷ், சிலம்பு என்கிற சிலம்பரசன், ஹரிதாஸ், நாச்சியார்கோவிலை சேர்ந்த ஜகன் என்கிற தமிழரசன் ஆ‌கியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 11 சவரன் நகைகள், இரண்டு இரு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Views: - 240

0

0

Leave a Reply