கும்பகோணத்தில் அடுத்தடுத்த 14 வீடுகளில் தீவிபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்..!

Author: Babu Lakshmanan
30 July 2021, 1:50 pm
kumbakonam -2- updatenews360
Quick Share

கும்பகோணம் அருகே சாக்கோட்டை சிவன் கோவில் தெருவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 வீடுகள் தீக்கிரையாகின.

கும்பகோணம் அருகே சாக்கோட்டை சிவன் கோவில் தெருவில் உள்ள மூங்கில் புற்றினை மர்ம நபர்கள் சிலர் இன்று தீ வைத்து எரித்துள்ளனர். அப்போது, அதில் இருந்து பரவிய தீப்பொறியானது அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கு தொற்றியது. மளமளவென பரவிய தீயால் அக்கம் பக்கத்தில் இருந்த 14 குடிசை வீடுகள் தீக்கிரையாகின.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். மேலும், அப்பகுதி மக்கள் தீயை மேலும் பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தீயணைப்பு படை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.

Views: - 144

0

0