எத்தனையோ வசதிகளிருந்தும் தார்பாயின் உதவியால் உடல் தகனம் : மயானம் இல்லாத பரவனூர் மக்களின் அவலம்..!!

Author: Babu Lakshmanan
4 September 2021, 8:15 pm
kumbakonam sudukadu - updatenews360
Quick Share

கும்பகோணம் அருகே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து விரைவில் தங்களது கிராமத்திற்கு மயானம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்பகோணம் அருகே கூறை இல்லாததால், மழையில் நனைந்தபடி இறந்தவர் உடலை தார்பாய் உதவியால் மழையில் நனையாதவாறு எரித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. திருப்பனந்தாள் அருகே வீராக்கன் ஊராட்சியில் உட்பட்ட பரவனூர் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இதுநாள் வரை இவர்களுக்கான மயானம் இல்லாததால், கொள்ளிடம் ஆற்றின் படுகை பகுதியிலேயே ஆங்காங்கே சடலங்களை எரித்தும், புதைத்தும் வருகின்றனர்.

மயானக் கொட்டகை இல்லாமலும், மயானத்திற்கு செல்வதற்கு சரியான பாதை வசதி இல்லாமல் இப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நேற்று பரவனூர் கிராமத்தை சேர்ந்த சின்னையன் என்பவரின் மனைவி சரோஜா உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அம்மையாரின் உடலை எரிப்பதற்கு கொள்ளிடம் ஆற்று படுகைக்கு எடுத்து சென்ற போது திடீரென மழை பெய்ததாதால் கொட்டும் மழையில் பிளாஸ்டிக் தார்பாயை பிடித்தவாறு உடலை நனையாமல் எரித்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மயானம் மற்றும் மயான பாதை வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசு விரைவில் இப்பகுதி மக்களுக்கு மயான பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இனியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அலட்சியம் செய்தால், ஊர் மக்களை ஒன்று திரட்டி பலகட்ட போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக பரவனூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Views: - 162

0

0