ராட்சசன் பட கணக்கு வாத்தியாரை மிஞ்சிய கும்பகோண வாத்தியார்… 23 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அதிர்ச்சி

Author: Babu Lakshmanan
16 September 2021, 7:21 pm
kumbakonam harassment - updatenews360
Quick Share

கும்பகோணம் : கும்பகோணத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில், அரசுப் பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அனைத்தும் கடந்த 1ஆம் தேதி முதல் திறக்கப்பட்டது. இந்நிலையில் கும்பகோணம் நகர மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வரும் சேகர் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் இத்தகவலை தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் வந்து பள்ளி நிர்வாகத்திடம் ஆசிரியர் மீது புகார் அளித்தனர். 23 மாணவிகள் அளித்த புகாரின் பேரில் பள்ளி நிர்வாகம் எஸ்.பி ரவளிபிரியாவிடம் ஆசிரியர் சேகர் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சேகர் என்பவரை பிடித்து விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று போலீசார் கணித ஆசிரியர் சேகரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியானது கணிதமேதை ராமானுஜம் உள்ளிட்ட பல்வேறு உலகப்புகழ்பெற்ற அறிஞர்கள் படித்த பள்ளி ஆகும். இப்புகழ்பெற்ற பள்ளியில் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 324

0

0