மளிகைக் கடையில் ரூ.3.80 லட்சம் பணம் திருட்டு : சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கொள்ளையனை தேடும் போலீசார்..!!

Author: Babu Lakshmanan
6 October 2021, 11:45 am
kumbakonam theft - updatenews360
Quick Share

தஞ்சை : கும்பகோணம் அருகே திருநறையூர் அரிசி மளிகை கடையில் பூட்டை உடைத்து 3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் பிரதான சாலையில் அசோக் என்பவர் அரிசி மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று காலை சற்று காலதாமதமாக கடையை திறக்க சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதுடன், ஷட்டர் சரியாக மூடப்படாத நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பணப் பெட்டியில் வைத்திருந்த 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்க்கும் பொழுது இன்று அதிகாலை 2.30 மணியிலிருந்து 2. 45 மணிக்குள் 40 வயது மதிக்கத்தக்க நபர் முகம் தெரியாதவாறு ஹெல்மெட் போட்டு ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து பணப்பெட்டியில் இருந்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியுள்ளது. இக் காட்சியைக் கொண்டு நாச்சியார்கோவில் காவல்நிலையத்தார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இன்று கடைக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் நாச்சியார்கோவில் பகுதிகளில் சமீபகாலமாக திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்கதையாகி உள்ளது.

Views: - 182

0

0