காட்டு யானைக்கு காப்பாற்ற வந்த கும்கி! சிகிச்சை அளிக்க ஆயத்தம்!!

13 September 2020, 7:38 pm
Quick Share

கோவை: மேட்டுப்பாளையத்தில் காயமடைந்து சுற்றித்திரியும் காட்டு யானையை சிகிச்சை அளிக்க கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை வனப்பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்க 5 பேர் கொண்ட மருத்துவ குழுக்கள் சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக, இரண்டு கும்கி யானைகள் நெல்லித்துறை காப்புக்காடு பகுதிக்கு கொண்டு வர ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ‘சுயம்பு’ என்ற கும்கி யானை போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இருந்து இன்று மாலை 4 மணி அளவில் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே வந்து இறங்கியது.

பின்னர் அந்த யானையை நெல்லித்துறை அருகே உள்ள தனியார் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. நாளை யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் சிகிச்சை அளிக்க உள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 5

0

0