‘கோவையில் உருவாகும் தனித்தீவு’ : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

12 August 2020, 7:32 pm
Cbe Sp Velumani Help - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் உள்ள குறிச்சி குளத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள குளங்கள் அனைத்தும் புதுப்பொலிவுபடுத்தும் பணிகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, உக்கடம் பெரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன மேம்பாட்டு பணிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், கோவையில் உள்ள குறிச்சி குளத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டு நடவடிக்கைகள் பற்றி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது, “கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மாநகராட்சி பகுதியில் உள்ள குளங்களை நவீனமயமாக்குவதோடு சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுப்பணித்துறை விதிகளின்படி, திட்ட நிறைவில், குறிச்சி குளத்தின் முழு தொட்டி நிலை குறையாது, திறன் மாறாதிருக்கும்.

மேலும், குளக்கரையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சைக்கிள் பாதை, படகு சவாரி, சமுதாய கூடங்கள், பறவைகளின் வாழ்விடத்தை மேம்படுத்த மரங்களோடு கூடிய தனி தீவு ஆகியவை அமையவுள்ளன. குளத்திற்கு உள்ளே வரும் நீரோடையின் பாதைகள் மாற்றப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,” எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 14

0

0